Advertisment

கரோனாவால் இறப்பவர்கள் தியாகியா ? ஒவைசியைக் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா !

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,166 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,965 லிருந்து 2,069 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 50 லிருந்து 53 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 151 லிருந்து 156 ஆனது. மேலும் டெல்லியில் உள்ள மேற்கு நிஜாமுதினில் இஸ்லாமிய சமூகத்தினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற "தாப்லிக் இ ஜமாத்" மாநாடு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற டெல்லி மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலருக்குக் கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

bjp

இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில், தமிழகத்தில் 309 கொரோனா+ கேஸ்ல 264 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் என்பது அரசின் அதிகார பூர்வ தகவல்.100க் கணக்கான நபர்கள் செல்போனைசுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடலாமா? பரிசோதனைக்கு அழைக்கும் சுகாதார ஊழியரிடம் மோடிக்கு சோதனை செய் என்று பேசலாமா? இவைகள் தீயசெயல்கள் என்று இதைக் கண்டித்ததால் உடனே என்னை மதவாதி என்பார்கள்.நோய்க்கு மதமில்லை என்று உபதேசம் வரும்.சரக்கு மிடுக்கு புகழ் பேச்சுக்குச் சொந்தக்காரர் குமுறுவார் என்றும், இந்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்ததால் தான் உலகிலேயே மிகக்குறைந்த பாதிப்பு உள்ள நாடாக இந்தியா உள்ளது.

மேலும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 309 பேரில் 264 பேர் இந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிகாரப்பூர்வ தகவல்.இவர்கள் நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது‌.அகம்பாவத்தை ஆதரிக்காதீர்கள் என்றும்,100% உண்மை. ஆனால் இவர்களது செயல்பாடு கண்டனத்திற்கு உரியதா இல்லையா. செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடலாமா? மருத்துவர்களை அடிக்கலாமா? தங்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பலாமா?நான் மதம் பார்க்க வில்லை இவர்களின் அராஜக செயலைக் கண்டிக்கிறேன். நீங்களும் கண்டிக்க வேண்டும் என்றும்,கொரோனா வால் இறப்பவர்கள் தியாகிகளாம்.ஒவைசி கூறுகிறார். இப்போது நோய்க்கு மதம் இல்லை என்பவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

coronavirus h.raja politics Speech
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe