bjp

Advertisment

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினருக்கு மோதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இரண்டு வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த மோதலால் இந்திய சீன எல்லையில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ள சூழலில், இருதரப்பில் இருந்தும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் பலியானதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீன அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இதற்கிடையே இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் 17 பேர் வீரமரணம் அடைந்ததாக இந்த ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், எல்லைப் பகுதியில் அத்துமீறல். கம்யூனிச சீனா அட்டூழியம் வன்மையாகக் ண்டிக்கத்தக்கது. எல்லையில் ராணுவ வீரர்கள் இன்னுயிரை ஈந்து நாட்டைப் பாதுகாக்கின்றனர். நாம் சீனப் பொருட்களை முழுமையாகப் புறக்கணிப்பது நம் கடமையாகும் என்றும், சீனாவின் அடாவடித்தனம் அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீரமரணம் அடைந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.