பிரபல ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.4000 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் உள்ளது என்றும், அந்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்து கடவுள்களின் பெயரில் மருத்துவமனைகள் திறந்து ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்தால் இந்துக்களுக்கு தங்கள் மதத்தின் மீது இன்னும் அதிக பற்றுதல் ஏற்படும் என்றும் பேசினார்.

Advertisment

sugisivam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் ரூ. 4000 கோடி கறுப்புப் பணத்தை வைத்துள்ளதாக சுகிசிவம் பேசியது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஏழுமலையானுக்கு பக்தர்கள் இடும் காணிக்கையை ஏழுமலையான் 4000 கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக சுகி சிவம் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் ஏன் தசமபாகம் பற்றி பேசுவதில்லை. இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.