Advertisment

தொல்.திருமாவளவனின் வேண்டுகோளை ஏற்ற எச்.ராஜா! ஆனால்...

vck

Advertisment

கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் 23.05.2020 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டு பின்பு இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் வி.சி.க. தலைவர் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் முன்ஜாமீன் பெற்றனர்.

Advertisment

இந்நிலையில்நேற்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் பா.ஜ.க. விற்கு பத்து கேள்விகள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொல்.திருமாவளவன் எழுப்பியஇந்தக்கேள்விக்கு, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளார். அதில், "பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்உள்ளதே; அதுபோல தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார் செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. தமிழக அரசை வற்புறுத்துமா? என்று திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு, நிச்சயமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஆர்.எஸ்.பாரதி விஷயத்தில் 3 மாதம் காலதாமதம் ஆனது போல் தற்போது தயாநிதிமாறன் விஷயத்தில் தாமதம் ஆவது போலல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்" என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கு தி.மு.க.வினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

h.raja politics Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe