ADVERTISEMENT

பிரியங்கா காந்தி குறித்து, எச்.ராஜா சர்ச்சை கருத்து... காங்கிரஸ் கண்டனம்!

11:42 AM May 21, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


உத்தரபிரதேசம் மாநிலத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாக அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆனால், அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் கட்சியின் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் அரசியல் செய்வதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இதனையடுத்து காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளின் விவரங்களைத் தருமாறு அரசு கேட்டது. அதனால், காங்கிரஸ் சார்ப்பில் பேருந்துகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசிடம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப்ரியங்கா காந்தி, "பேருந்தில் பா.ஜ.க. பேனர்களை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் எங்கள் சேவைகளைத் தடுக்காதீர்கள் இந்த அரசியலினால் 3 நாட்கள் விரயம் செய்யப்பட்டு விட்டன. பல தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை விட்டுள்ளனர்" எனத் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்திரப் பிரதேசத்தில் பிரியங்கா வாத்ரா புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கூட்டிவர நாங்கள் 1,000 பேருந்துகளை நிறுத்தியிருக்கிறோம் என்று 2 வீலர் 3 வீலர் நம்பர்களையெல்லாம் கொடுத்து மிகப்பெரிய மோசடி செய்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT