Advertisment

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை கடுமையாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா!

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

bjp

Advertisment

அதில், மசூதிகளில் நமாஸ் செய்துவிட்டு வெளியே வந்து பஸ்களை கொளுத்துவது வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்றும், புல்வாமாவுக்கு பொங்காதவர்கள், நாட்டின் அச்சுறுத்தலுக்கு பொங்காதவர்கள், ஆம் எத்தனையோ முறை பாகிஸ்தான் இங்கு குண்டுவெடிப்பை செய்தபொழுது பொங்காதவர்கள், சீன ஊடுருவலுக்கு பொங்காதவர்கள், இப்பொழுது அந்நிய நாட்டுக்காரனை வெளியேற்றுவோம் என்றவுடன் வருகின்றார்கள் பார்த்தீர்களா? என்றும், விஷயம் வேறோன்றுமில்லை, புற்றுக்கு வெந்நீர் ஊற்றியாயிற்று நாகங்கள் வெளிவருகின்றன, குழவி கூட்டை கலைத்தாயிற்று குளவிகள் அலறி அடித்து பறக்கின்றன‌. வளையினை வெட்டியாயிற்று கருந்தேள்கள் வீதிக்கு வருகின்றன, குளத்தை கலக்கியாயிற்று முதலைகள் கரைக்கு ஓடிவருகின்றன‌ என்றும், விஷ விருட்சத்தை வெட்டியாயிற்று, நச்சு பறவைகள் அலை மறிக்கின்றன. தேசம் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துகொண்டே இருக்கின்றது. அரசு செய்யவேண்டியதை மிக வேகமாக செய்யட்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

admk citizenship amendment bill h.raja protest
இதையும் படியுங்கள்
Subscribe