Advertisment

ராகுல் காந்தியின் அநாகரிகமான செயல் என்று எச்.ராஜா பதிவிட்ட சர்ச்சை புகைப்படங்கள்!

ஜார்க்கண்ட் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் 'மேக் இன் இந்தியா' குறித்து பேசி வரும் நிலையில், தொடர் பாலியல் வன்முறைகள் அரங்கேறி, 'ரேப் இன் இந்தியா'வாக தற்போது நம் நாடு உள்ளதாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் அமளியிலும் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

Advertisment

bjp

Advertisment

ராகுல் காந்தி கூறிய "ரேப் இன் இந்தியா" விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், டெல்லியை பாலியல் வன்கொடுமையின் தலைநகரம் என பிரதமர் மோடி பேசிய வீடியோவை ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாஜகவினருக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவை ரேப்பிஸ்ட் கேபிடல் என்றும். மேக் இன் இந்தியா வை ரேப் இன் இந்தியா என்றும் பேசிய ராகுல் காந்தியின் அநாகரிகமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்து ஒரு சில புகைப்படங்களையும் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Speech ragulganthi twitter h.raja congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe