ADVERTISEMENT

முஸ்லீம்கள் மற்றும் காங்கிரஸ் பற்றி சர்ச்சை ஏற்ப்படுத்தும் வகையில் கருத்து கூறிய பாஜகவின் எச்.ராஜா!

12:38 PM Dec 10, 2019 | Anonymous (not verified)

பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவிப்பார். சில நாட்களுக்கு முன்பு இந்து கோவில்கள் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைப் பற்றி சர்ச்சை ஏற்படும் வகையில் கடுமையாக விமர்சித்தார். அதன் பின்பு பிரியங்கா ரெட்டி வழக்கின் என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. உனாவ் படுகொலை கற்பழிப்பு குற்றவாளிகள் பைலில் வெளிவந்த 5 நாட்களுக்குள் தாங்கள் கற்பழித்த பெண்ணைப் படுகொலை செய்கின்றனர். இந்த மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT



இந்த நிலையில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும் என்று தெரிவித்து இருந்தனர்.

ADVERTISEMENT


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் எச்.ராஜா கருத்து கூறியுள்ளார். அதில், இந்தியாவை மதத்தின் அடிப்படையில் வெட்டிப் பிளந்த காங்கிரஸ் இன்று கூச்சலிடுகிறது. 1947 லிருந்து இன்று வரை பாக்கித்தான் மற்றும் பங்களாதேஷில் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, மதம் மாற்றப்பட்ட, அங்கிருந்து இந்தியாவிற்கு விரட்டியடிக்கப் பட்ட இந்துக்கள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் மற்றும் கால்டுவெல் புத்திரர்கள் தயாரா. மத்திய அரசின் சரியான நடவடிக்கையை எதிர்ப்பது அரசியல் மோசடி செயல். இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கொடுமை படுத்தப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட அகதிகள். ஆனால் முஸ்லீம்கள் ஊடுருவல் காரர்கள். இந்த உண்மையை 1947ல் இந்துக்களை ஓநாய்களிடம் தூக்கி எறிந்த காங்கிரஸ் மறைக்கப் பார்க்கிறது. மேலும் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆன கதியே மகாராஷ்டிரத்தில் மதசார்பற்ற சிவசேனாவிற்கு ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT