ADVERTISEMENT

திராவிட அரசியல் பற்றி பாஜகவின் எச்.ராஜா மீண்டும் சர்ச்சை ட்வீட்... கோபமான திமுகவினர்!

01:49 PM Dec 03, 2019 | Anonymous (not verified)

கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவரகள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக்கொண்டு தான் இருப்பார்கள். வீதிக்கு வரும் நேரமிது' என கூறியிருந்தார். இதனையடுத்து திமுகவை சீண்டும் வகையில் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் திமுகவினரிடையே பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் வாக்காளர்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறது என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் திராவிட அரசியல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், "திராவிட அரசியல் என்பது, இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும், சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும், கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும், தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும், லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான் திராவிட அரசியல்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT