சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஒரு முதியர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.

Advertisment

bjp

Advertisment

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் அமைப்புக்கு எதிராக பாஜகவின் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அதர்மம் தலைவியித்தாடுகிறது. சீனாவின் அணுகுமுறை இங்கும் வரவேண்டும் என்றும், தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார் என்றும், 1998ல் கோவையில் தொடர் குண்டு வைத்த கும்பல் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம் என்றும், சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.