Advertisment

சீமான், தொல்.திருமாவளவனை சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா!

பாஜக திருச்சி மண்டலத் துணைத் தலைவராக உள்ள விஜயரகு என்பவரை பரபரப்பான மக்கள் கூட்டம் நிறைந்த காந்திமார்கெட் பகுதியில் 27/01/2020 அன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில், திருச்சியில் திங்கள்கிழமை படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் விஜயரகு இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா சென்று ஆறுதல் கூறினார். மேலும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

Advertisment

bjp

இந்த கொலை குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது, இதுவே ஒரு முஸ்லீம் கொலை செய்யப்பட்டு இருந்தால் சும்மா இருந்து இருப்பாங்களா, போஸ்டர் ஒட்டுவதை தடுக்கும் தைரியம், முதுகெலும்பு இந்த போலீசுக்கு வந்துருக்குமா, இந்துக்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா இருக்கா இந்த தேசத்துல என்று கேள்வி எழுப்பினார். அதோடு தமிழகத்தில் முஸ்லீம் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்தார். மேலும் திருமாவளவன் மாதிரியான கேவலமானவர்கள் என்றும் தலித் இன விரோதி இந்த திருமாவளவன் என்றும் ஏற்கனவே கூறியுள்ளேன். ஏனென்றால் காசுக்கும், கூலிக்கும் மாறு அடிக்கிறவர், இந்து கோவிலை தகர்ப்பேன், இடிப்பேன் என்று பேசுவது, அதே மாதிரி சரக்கு மிடுக்கு பேசுறது, இந்த மாதிரியான மிகக் கேவலமான அரசியல்வாதி இந்த பிரச்சனைக்கு ஏன் வரவில்லை என்கிறேன் என்றார்.

Advertisment

மேலும் முஸ்லீம் இளைஞன் மாடு திருடபோனான் என்ற கொலைக்கு எல்லா ஊடங்களும் ஒரு வாரமாக ஒப்பாரி வைத்தீர்கள், இந்த கொலைக்கு மட்டும் ஏன் பேசாம இருக்கீங்க என்றும் எச்.ராஜா பேசினார். தொடர்ந்து பேசியவர் இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ் தேசிய பிரிவினை வாதிகள் சீமான் மற்றும் மே 17 இயக்கம் வைத்துள்ள திருமுருகன் காந்தி போன்ற தேச விரோதிகள் இவங்களுடைய பெயரில் எல்லாம் இந்து பெயர் இருக்கும்.ஆனால் இவர்கள் எல்லாம் தேச விரோத கூலிப்படைகள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

h.raja seeman Speech thol.thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe