ADVERTISEMENT

தொல்.திருமாவளவனையும், கி.வீரமணியையும் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா!

06:05 PM Jan 21, 2020 | Anonymous (not verified)

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.

ADVERTISEMENT



இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனையும், திக தலைவர் கி.வீரமணியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவனும், சமீபத்தில் கிருஷ்ண பரமாத்மாவையும் பகவத்கீதையையும் இழிவாகப் பேசி திருச்சியில் எதிர்வினையை நேரில் சந்தித்த கி.வீரமணியும் பண்பாடு நாகரிகம் குறித்து பேசுவது விநோதமாக உள்ளது. இதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பதோ என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT


மேலும் சேலத்தில் ஹிந்து கடவுளை ஈவெரா அவமதித்ததை கண்டித்து ஆத்திக சங்கத்தை சேர்ந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் ஒரு சுவரொட்டி அச்சிட்டார் அதை தமிழக அரசு தடை செய்து அந்த போஸ்டர்களை கைப்பற்றியது. ஆனால் திரு.சின்ன அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில் அந்த சுவரொட்டியில் ராமனையும் முருகனையும் ஈவெரா வலது கையில் செருப்பை வைத்துக்கொண்டு அடிப்பதுபோலும் இடது கையில் மாற்றான் மனைவியை பெண்டாட சட்டத்தில் அனுமதி வேண்டும் என்று எழுதிய நோட்டீசும் போட்டு அச்சடிக்கப்பட்டது. 24-02-1971 ஆணையின் படி சென்னை உயர்நீதிமன்றம் அரசு கைப்பற்றிய போஸ்டர்களை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் இதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT