Advertisment

மூலபத்திரத்தின் ஒரிஜினலை காட்டுங்க... ரஜினி பேச்சுக்கு திமுகவை சீண்டிய பாஜகவின் எச்.ராஜா... கோபத்தில் திமுகவினர் எழுப்பிய கேள்விகள்!

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.

Advertisment

bjp

Advertisment

இந்தநிலையில், ரஜினி பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் என திமுகவையும், திராவிடர் கழகத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் எச்.ராஜா. ஏற்கனவே, திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை என்றும் பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என்று கூறியிருந்தார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு திமுக மற்றும் திகவினர் எதிர்ப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், ராஜா அவர்களே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது உங்களிடம் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் இந்திய அளவில் அதிக பொய் செய்திகளை உருவாக்கி பரப்புவது பாஜக, மோடி ஆதரவாளர்கள் தான் என்றும் இதை ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி ஆய்வறிக்கையில் கூறியுள்ளது என்றும் கருத்து கூறிவருகின்றனர்.

murasoli politics rajinikanth Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe