ADVERTISEMENT

திமுகவையும், கமல்ஹாசனையும் கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம்!

04:39 PM May 06, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


ADVERTISEMENT


கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இதனால் ஏராளமானவர்கள் மதுவில் இருந்து மீண்டு வருகின்றனர். அதனால் அந்தக் குடும்பப் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில்தான் டாஸ்மாக் கடைகளை மீண்டும் மே- 7 ஆம் தேதி திறக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், போராட்டங்களும் நடந்து வருகிறது.


இந்த நிலையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை, தன்னாட்சியுரிமை பறிப்பு மற்றும் மின்சார சட்ட திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு, மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக அமல்படுத்துவது, தலைக்கனம் தவிர வேறென்ன. இத்தகைய கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு. நடிகர் கமலின் இந்த கருத்துக்கு நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியுள்ளார். அதில், "எந்த தொடர்பும் இல்லை. ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்றிணைவோம் வா என்று அழைக்கிறார், அவர்கள் யாரை அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்சி கடிதங்களையும், கவிதைகளையும் தருகிறது. நிச்சயமாக இந்த ஊரடங்கு மற்றும் சூடான சூரியன் (வெப்பம்) அவர்களை இப்படி செல்ல வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT