தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் அன்புமணி ராமதாஸிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுகவை சேர்ந்த டாக்டர். செந்தில்குமார். இவர் சமூக வலைத்தளங்களில் எதிர்க் கட்சியினர் வைக்கும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பவர். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினரும், பாஜகவின் இளைஞரணி துணைத் தலைவருமான எஸ்.ஜி.சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். அதில் என் நண்பரின் அம்மாவிற்கு முஸினஸ் கார்சினோ வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவரின் பெயர் பிரேமலதா. அவர் தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரின் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவைபடுகிறது. அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள நிதி உதவி தேவைப்படுகிறது. நிதி உதவி பெற்றால் மட்டும் தான் அவரை காக்க முடியும். தயவு செய்து உதவுங்கள், என்று குறிப்பிட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பாஜகவின் இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.ஜி.சூர்யாவின் கோரிக்கையைப் பார்த்த திமுக எம்.பி செந்தில் குமார் இதற்கு அளித்த பதிலில், சூர்யா, என்னால் உங்கள் நண்பரின் அம்மாவிற்கு நிதி பெற்றுத் தரமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிதி உதவி பணத்தில் இருந்து உங்களுக்கு பணம் பெற்றுத் தர முடியும். என்னிடம் விவரத்தை தெரிவியுங்கள். அனைத்து விதத்திலும் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யத் தயாராக இருக்கிறேன், என்று செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு தற்போது எஸ்ஜி சூர்யா டிவிட்டரில் செந்தில் குமாரிடம் நன்றி தெரிவித்துள்ளார். உங்களையே தொடர்பு கொள்வேன், உங்களது மெயில் ஐடி கிடைக்குமா என்று கேட்டுள்ளார். இதற்கு தன்னுடைய மெயில் ஐடியை மெசேஜ் செய்து இருப்பதாக செந்தில் குமார் பதில் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவர்களின் உரையாடல் அரசியல் கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.