டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராவது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தடா.பெரியசாமி பதிவிட்டு இருந்தார். அதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளிக்கும் வகையில், திமுக அங்கு வருவதற்கு தான் வெளிநடப்பாம் என்று திமுகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் திரௌபதி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

bjp

Advertisment

அதில், துருபத ராஜன் மகள் திரௌபதி பற்றி பலர் அலறுகின்றனர். ஆனால் இந்துக்களால் போற்றப்படும் வன்னியர் குல க்ஷத்ரியர்களின் அக்னி தெய்வம் திரௌபதியை திமுகவைச் சார்ந்த பழ.கருப்பையா மிக இழிவாக பேசிய போது அதை கண்டித்தது நான் மட்டுமே.முஸ்லீம் தீவிரவாதிகள் நண்பர் வேல் முருகன் எங்கிருந்தார்.சிந்தி என்று கூறியுள்ளார். மேலும் தற்போது பழ.கருப்பையா திமுகவில் இருந்து ராஜினாமா செய்துள்ள நிலையில் அவரை திமுகவை சேர்ந்த பழ.கருப்பையா என்று குறிப்பிட்டுள்ளது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.