Advertisment

மீண்டும் தொல்.திருமாவளவன் பற்றி பா.ஜ.க.வின் எச்.ராஜா சர்ச்சை கருத்து!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நடிகை காயத்ரி ரகுராம், பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் பலர் இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வந்தனர்.

Advertisment

bjp

Advertisment

இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவரகள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக்கொண்டு தான் இருப்பார்கள். வீதிக்கு வரும் நேரமிது' என கூறியிருந்தார். இந்த நிலையில் இணையவாசிகள் பலரும் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் தொல்.திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி மூவரும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில், வழக்கு பதிந்தால் மட்டும் போதாது இம்மாதிரி கலவரம் தூண்டுவதை பிழைப்பாக கொண்ட இவர்கள் குண்டர்கள் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.மேலும் மதமாற்றும் மதவெறி சாதிகளின் கைக்கூலிகள் இவர்கள். இவர்களின் நோக்கம் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பதே என்றும் தெரிவித்துள்ளார்.

h.raja Speech Thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe