Advertisment

எடியூரப்பா முதல்வர் கனவிற்கு செக் வைத்த பாஜக!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

yediyurappa

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பார் என்ற நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவை பெற்றுவிட்டு ஆட்சி அமைக்கலாம் என்று பாஜக தலைமை கருதுவதாக சொல்லப்படுகிறது. குடியரசு ஆட்சியை கர்நாடகாவில் கொண்டு வரும் முயற்சியிலும் மத்திய அரசு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதனையடுத்து முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் அவரது ஆதரவாளர்களுடன் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லி விசிட்டால் எடியூரப்பா தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாக கூறுகின்றனர்.

politics ediyurappa kumarasamy karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe