Advertisment

மீதம் உள்ள மூன்று வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

The BJP has fielded the remaining three candidates

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில்பாரதிய ஜனதாவுக்கு20 தொகுதிகளைஅதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜகதொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் 05.03.2021 அன்று கையெழுத்தானது. முன்னதாகஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும்பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 17 பெயர்கள்கொண்டவேட்பாளர்கள் பட்டியல் கடந்த 14ஆம் தேதி வெளியானது. அதன்படி, எல்.முருகன் - தாராபுரம்,எச்.ராஜா - காரைக்குடி, எம்.ஆர்.காந்தி - நாகர்கோயில், அண்ணாமலை - அரவக்குறிச்சி, வானதி சீனிவாசன் - கோவை தெற்கு, குஷ்பூ - ஆயிரம்விளக்கு,சரவணன் - மதுரை வடக்கு, சி.கே.சரஸ்வதி - மொடக்குறிச்சி, கலிவரதன் - திருக்கோவிலூர்,நாயனார் நாகேந்திரன் - திருநெல்வேலி, தணிகைவேல் - திருவண்ணாமலை, பி.ரமேஷ் - குளச்சல்,குப்புராமு - ராமநாதபுரம், பூண்டி எஸ்.வெங்கடேசன் - திருவையாறு, வினோஜ்.பி.செல்வம் - துறைமுகம், விருதுநகர் - பாண்டுரங்கன், திட்டக்குடி - பெரியசாமிஎன பட்டியல் வெளியான நிலையில் மீதம் உள்ள மூன்று இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisment

அதன்படி, நகேஷ்குமார் - தளி, ஆர்.ஜெயசீலன் - விளவங்கோடு,போஜராஜன் - உதகை என பட்டியல் வெளியாகியுள்ளது.

tn assembly election 2021 Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe