ADVERTISEMENT

காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி காட்டிய புள்ளி விவரத்தை நீக்கிய பாஜக அரசு! காங்கிரஸ் அதிர்ச்சி!

10:12 AM Aug 31, 2019 | Anonymous (not verified)

கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அப்போது தொடர்ந்து இரண்டு முறை மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். அரசாங்க வலைத்தளத்திலிருந்து மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த அதிக உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியைக் காட்டும் அறிக்கையை மத்திய பாஜக அரசு நீக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் எதிர் கட்சிகளை மட்டுமில்லாமல் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணமாக வலைத்தளத்தில் இருந்து இந்த அறிக்கை நீக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசாங்கத்தின் காலகட்டத்தில் நடந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டிய அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க விபரங்கள் அரசாங்க அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2004-05 முதல் 2010-11 என மாற்றியது. இந்த அறிக்கையின் படி 2006 முதல் 2007 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியா 10.8 சதவீதமாக வளர்ச்சியில் வளர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 25 அன்று அமைச்சக இணையதளத்தில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே தளத்தை அளவுகோலாகப் பயன்படுத்தி 2006 முதல் 2007 ஆம் ஆண்டில் இந்தியா 10.8 சதவீதமாக உள்நாட்டு உற்பத்தியில் வளர்ந்தது என்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்த தகவலை மத்திய அரசு நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT