Skip to main content

“தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலன் பாஜக!” - ஜே.பி.நட்டா பேச்சு!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் து.பெரியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திட்டக்குடி அருகிலுள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “திட்டக்குடியானது சிதம்பரம் அருகில் உள்ள கடவுள் வைத்தியநாத சுவாமியின் பூமி, வெற்றியின் பூமி. தமிழ்நாடு வள்ளலார் சுவாமிகளின் பூமி. தமிழ் மொழியானது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய மொழி. பிரதமர் மோடி, எங்கு சென்றாலும் தமிழ்மொழியை உச்சரிக்கிறார்.

 

ஐக்கியநாடுகள் சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடலை உச்சரித்தார் என்பதே தமிழ்மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது. 48 ஆயிரம் கோவில்கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் மற்றும் எண்ணற்ற மகான்கள் உதித்தது தமிழ் பூமி. ஜாதி, மத பேதமின்றி உலகம் எல்லோருக்கும் ஒன்று. பா.ஜ.க அத்தகைய உன்னத கொள்கையைப் பின்பற்றுகிறது. உலகத்திற்கே எடுத்துக்காட்டான இந்த தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலனாக பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடி திகழ்கின்றனர்.

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

பாரதத்தை உலகின் குருவாக மாற்றும் பிரதமரின் உன்னத குறிக்கோளோடு நாம் பாடுபட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தை உரைக்கிறேன். தி.மு.க, காங்கிரசின் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். பா.ஜ.க தனித்துவம் வாய்ந்த, வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய, தன்னலமற்ற கட்சி. 2ஜி என்பது மாறன் குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக செய்த ஊழல், 3ஜி என்பது ஸ்டாலின் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக செய்த ஊழல், 4ஜி என்பது காங்கிரஸ் கட்சி தலைமை நான்கு தலைமுறையாக செய்த ஊழல். ஊழலையே கலாச்சாரமாக கொண்ட காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை வீழ்த்த நாம் பாடுபட வேண்டும். தி.மு.க வெற்றிபெற மக்களின் உதவி தேவைப்படுவதால் ஓட்டுக்கேட்டு வருகிறார்கள். 

 

தி.மு.க என்பது குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பதே அதன் விரிவாக்கம். காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதே இல்லை. தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது ஜெய்ராம் ரமேஷ். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் தான். தமிழ்க்கலாச்சாரத்தை பாதுகாக்கும் காவலனாக பிரதமர் மோடி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையால் அடிக்கடி சுடப்பட்டனர். ஆனால் மோடி பிரதமரான பின் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நீலப்புரட்சி மூலம் தக்க நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். 

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

ஜாஃப்னா பகுதிக்கு முதல் இந்தியப் பிரதமராக மோடி சென்று பார்வையிட்டு, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகப் பார்த்து வீடுகளை இழந்து நின்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். தமிழ்க்கடவுள் முருகனை, கருப்பர் கூட்டம் இழிவுபடுத்தியபோது பா.ஜ.க தவிர வேறு எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. பா.ஜ.க உரிய நடவடிக்கை எடுத்து வேல்யாத்திரையை மேற்கொண்டது. இதைப்பார்த்த ஸ்டாலினும் கையில் வேல் எடுத்து ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தார். தமிழ்க் கலாச்சாரத்தை பா.ஜ.க காப்பாற்றுகிறது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்காக 90 ஆயிரம் கோடி கொடுத்தது. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் அதை விட 500 மடங்கு அதிகமாக 19 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

 

தற்போது 2020 - 21ல், 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முழு அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது. தமிழகத்தில் நெசவு தொழிற்சாலைகளுக்கு 16ஆயிரம் கோடி நிதி, தேசத்தின் முக்கியமான பாதுகாப்புக்காக சென்னை, கோவை, ஒசூர், திருச்சி, சேலம் பகுதி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில், 7 லட்சம் கோடி ரூபாய் நிதி, சித்த மருத்துவம் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்துள்ளது. சென்னை மெட்ரோ பணிகளுக்காக 3,770 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 12 ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, மதுரை எய்ம்ஸ் மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில், தமிழகத்தின் வளர்ச்சியில் மோடி அக்கறை செலுத்தி வருகிறார் பிரதமர் மோடி. உள்ளூர்ப் பொருட்களுக்கு உலக அரங்கில் முக்கிய முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு, ஆதிதிராவிட மக்களுக்கே வழங்கப்படும். கோவில்கள் மீட்கப்பட்டு, இளைய தலைமுறையினரின் கல்வி, தேவையான வசதிகள் செய்து தரப்படும். 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு” - சு.வெங்கடேசன் எம்.பி.

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Modi government has staged another injustice Su Venkatesan MP

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி இருந்து. இந்த நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி இருந்தனர். மேலும் நன்னடத்தை குழுவின் இந்த பரிந்துரை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 

Modi government has staged another injustice Su Venkatesan MP

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

‘நாளை என் வீட்டிற்கு  சி.பி.ஐ வரும்; அடுத்த 6 மாதத்திற்குள் கைது செய்யப்படுவேன்’- மஹுவா மொய்த்ரா

Published on 08/12/2023 | Edited on 09/12/2023
Mahua Moitra said that the BJP government will arrest me within the next 6 months

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது. 

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தால் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து, இன்று, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “துர்க்கை வந்துவிட்டார்; பொறுத்திருந்து பார்ப்போம். துணிகளை உருவ துவங்கிய இவர்கள், தற்போது மகாபாரத போரை பார்ப்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் புகழ்மிக்க கவிஞரும், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினருமான ராம்தாரி சிங் தினகரின் வரியை மேற்கோள் காட்டி, “ஒரு மனிதன் அழியும் போது முதலில் மனசாட்சி மரணிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

பின்னர், மக்களவையில் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 

நாடாளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஹுவா மொய்த்ரா, “அதானிக்காக மட்டுமே ஒட்டுமொத்த அரசும் இயங்கி வருகிறது; அதானி மீதான ரூ.13,000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் புகாரில், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் என்ன செய்தது; அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த அரசும் இயங்கி வருகிறது. எனது பதவியை பறித்து வாயை அடைப்பதன் மூலம், அதானி விவகாரத்தை மறைக்க முடியாது; சி.பி.ஐ. நாளை என் வீட்டிற்கு அனுப்பப்படும்; அடுத்த ஆறு மாதத்திற்குள் என்னை கைது செய்வார்கள்; இது நிச்சயம்; எனக்கு 49 வயதாகிறது. இன்னும் 30 வருடங்களுக்கு நான் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும், வீதிகளிலும் போராடுவேன். தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது” எனத் தெரிவித்தார்.