சிவகங்கை தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கார்த்திக் சிதம்பரம். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் ஆவார். கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான வழக்கில், டெல்லியில் ஜோர் பாக் பகுதியில் இருக்கும் சிதம்பரம் குடும்பத்துக்குச் சொந்தமான பங்களாவையும் முடக்கி வச்சிருக்கு அமலாக்கத்துறை.

congress

Advertisment

Advertisment

கார்த்திக் சிதம்பரமோ, எம்.பி.ங்கிற முறையில் தனக்கு அரசால் ஒதுக்கப்பட்ட, தமிழ்நாடு இல்ல அறையில், தன் உதவியாளரை தங்க வச்சிட்டு, அவர் ஜோர் பாக் பங்களாவிலேயே தங்கியிருக்கார். இதைப் பார்த்த அமலாக்கத்துறை, கார்த்தியிடமிருந்து பங்களாவை மீட்க, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. இதைப் பார்த்த கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தை அனுகியிருப்பதாக கூறுகின்றனர்.