எடப்பாடியின் டூர் புரோகிராம் பற்றி கேட்ட போது, சரியா திட்டமிட முடியாம இருக்காராம். மக்கள்தொடர்புத் துறையில் இருந்து எந்த அதிகாரியை அழைத்துச் செல்வதுன்னு கூட முடிவுக்கு வரமுடியாமல் குழம்பறாராம். இதுக்கிடையில் எடப்பாடியின் முதல்வர் பதவியையும், துறை பொறுப்புகளையும் தற்காலிகமாக ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைத்துவிட்டுப் போகும்படி டெல்லியிலிருந்து அதிக நெருக்கடி. ஓ.பி.எஸ், தங்கமணி, வேலுமணி உள்பட எவரையும் நம்பமுடியாத நிலையிலிருக்கும் எடப்பாடி, என் பதவியையோ பொறுப்புகளையோ எவரிடமும் ஒப்படைக்க மாட்டேன்.

Advertisment

admk

எந்த நாட்டில் இருந்தாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிர்வாகத்தை என்னால் கவனிக்க முடியும்னு சொல்லிக் கொண்டிருக்கிறாராம். கட்சியிலும், தன் வலிமையை அதிகரிச்சிக்கணும்னு நினைக்கிறார் எடப்பாடி. அதனால் பல டெக்னிக்குகளைக் கையில் எடுக்கறார். அதாவது, தமிழகம் முழுக்க இருக்கும் நீர் நிலைகளைத் தூர் வாருவதற்கான ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் அளவுக்கான திட்டம் எடப்பாடி அரசின் கையில் இருக்கு. அதற்கான காண்ட்ராக்டுகளை, மாஜி மந்திரிகளின் வாரிசுகளுக்குக் கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி. அதனால் அவர்களை ’கிளாஸ் ஒன்’ காண்ட்ராக்டர்களாக ஆகச் செய்து, அவர்கள் காட்டில் கனமழை பெய்ய வைக்கப் போகிறாராம். இப்ப உள்ள மந்திரிங்க எதிரா திரும்பினாலும், மாஜிக்களின் ஆதரவு தனக்கு இருக்கும்ங்கிறதுதான் அவரோட வியூகம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.