BJP flag set on fire in Tamil Nadu

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாஜக கொடிக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லப்பிள்ளையார்குளம் பேருந்து நிறுத்தத்தில் திமுக, அதிமுக, பாஜக என பலகட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் பாஜக கொடிக்கம்பத்தில் இருந்து கொடியை கீழே இறக்கி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதே கிராமத்தில் இதற்கு முன் மது போதையில் இருவர் பாஜகவின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நிலையில் தற்போது கொடிக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment