தமிழக பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத் தலைவராக அஷோக் குமார் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். இவர் மக்களவைத்தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடத்திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வந்துள்ளார். இந்தச் சூழலில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையுடன் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அஷோக் குமார், அக்கட்சியில் இருந்து விலகியதாகத்தகவல் வெளியானது.
இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகிய அசோக்குமார், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர்சரஸ்வதியின் மருமகன் ஆவார்.