Advertisment

"வளருது பாஜக... அலறுது திமுக..." -பா.ஜ.க ஆர்ப்பாட்டம் (படங்கள்)

செப்டம்பர் 17ஆம் தேதி, பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா பெரும் அளவில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் சென்னை நங்கநல்லூர் பகுதியில் பா.ஜ.க.வினர் மோடி பிறந்தநாளுக்காக சுவர் விளம்பரம் செய்திருந்தனர். அந்த விளம்பரத்தை அழிக்க தி.மு.க.வினர் முயன்றதாகத் தெரிகிறது. இதைக்கண்ட அப்பகுதி பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் அதனைத் தடுக்க முயன்றுள்ளனர். அதேசமயம் தி.மு.க.வின் ஆதரவாளர்களும் ஒன்று கூடியுள்ளனர்.

Advertisment

இருதரப்பினருக்கும் இடையான தகராறு, கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் பா.ஜ.க.வின் மகளிர் அணி நிர்வாகிகள் சர்ஸ்வதி மற்றும் மீனாட்சி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, இன்று சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நங்கநல்லூர், மேற்கு மாவட்டம் சார்பில்அம்பத்தூர், தென் சென்னை மாவட்ட சார்பில் பனகல் மாளிகை அருகில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சார்பில் ஆட்சியர் அலுவலகம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட சார்பில் அண்ணாநகர் ஆர்ச் அருகில், வடசென்னை கிழக்கு மாவட்ட சார்பில்தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில், திருவற்றியூர் வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பெரவளூர் ஆகிய ஏழு இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் "வளருது பாஜக... அலறுது திமுக..." என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe