BJP disbanded with cage; Annamalai action

Advertisment

பாஜகவில் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத்தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் வெளியான மற்றொரு அறிக்கையில் மாவட்டத்திற்கு புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி முருகேசன் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..” எனத்தெரிவித்துள்ளார்.