அ.தி.மு.க. அணிகள் எல்லாமும் ஒன்றிணைய வேண்டும் என்ற தன் நீண்ட காலக் கனவை நனவாக்க, சசியின் நட்பை நாடுகிறது பா.ஜ.க. அதற்கு ஈடாகத் தனது விடுதலை முன்கூட்டியே அமையணும்ங்கிற எதிர்பார்ப்பு சசிகலாவிடம் இருக்கிறதாம். எனவே இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடியும், சசிகலாவுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள தன் மனைவி ராதா மூலமான தூதுப் படலத்தைத் தொடர்கிறார். தனது முதல்வர் பதவிக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை மட்டுமே அவரிடம் இருக்கிறது. ஆனா, ஓ.பி.எஸ்.சுக்கு, இவர்கள் இணைந்தால் நம்மை ஓரங்கட்டிடுவாங்கங்கிற பயம் இருக்குது. அதனால, டெல்லியின் அழைப்பில் சமீபத்தில் அங்கு பறந்த ஓ.பி.எஸ்., பா.ஜ.க. தலைமையிடம், "உங்களைத்தான் முழுமையாக நம்புகிறேன்.

admk

Advertisment

Advertisment

அ.தி.மு.க.வின் அணிகள் இணைவதில் எனக்கு எந்தவித வெறுப்பும் இல்லை. அதேசமயம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை எனக்குக் கிடைக்கச் செய்யுங்கள். எடப்பாடியே முதல்வராக நீடிக்கட்டும். எனக்கு துணை முதல்வர் பதவி கூடத் தேவையில்லை. நான் கட்சிப்பொறுப்பில் மட்டும் இருந்துகொள்கிறேன். அதேபோல் என் மகன் ரவீந்திர நாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க. மனமுவந்து இடம் கொடுக்கவேண்டும்' என்றெல்லாம் கோரிக்கைகளை வைத்திருக்கிறாராம். தனது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்னு ஓ.பி.எஸ். உறுதியா நம்புறாரானு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.