Advertisment

அடம் பிடிக்கும் பாஜக... இடியாப்ப சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..!

ddd

Advertisment

அதிமுக தலைமையுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு மற்றும்பல கட்டப்பேச்சுவார்த்தை எனப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அதிமுகவிடம் இருந்து 20 தொகுதிகளைப்பெற்றுள்ளது பாஜக. இந்த 20 தொகுதிகள் எவை எவை என்று ஒரு பட்டியல் தயாரித்துள்ளது பாஜக. ஏன் அந்த தொகுதிகளை தேர்வு செய்தோம் என்று டெல்லிக்கும் அனுப்பி வைத்திருக்கிறது.

இந்தநிலையில் சென்னையில் மட்டும் ஐந்து தொகுதிகளை கேட்டு பிடிவாதம் செய்கிறது. தி.நகர், வேளச்சேரி, மைலாப்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, கொளத்தூர் ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளது.

ddd

Advertisment

இதுகுறித்து அதிமுக தலைமை விவாதித்தபோது, வேளச்சேரி தொகுதியை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர் ஒருவருக்கு ஒதுக்கி வைத்துள்ளாராம். அதே நேரத்தில் பாமகவும் இந்த தொகுதியைக் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதாகவும் அதிமுக சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் விரும்பியபடியே அவரது ஆதரவாளருக்கு வேளச்சேரி தொகுதியை ஒதுக்கிவிட்டால், பாமக மற்றும் பாஜகவை எப்படிச் சமாளிப்பது, ஓ.பன்னீர்செல்வம் விருப்பத்தையும் புறந்தள்ள முடியாது.யாருக்கு இந்த தொகுதியை ஒதுக்குவது என இடியாப்ப சிக்கலில் உள்ளார்.

admk tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe