Advertisment

இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக முடிவு...அதிர்ச்சியில் அதிமுக!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்உள்ள காலியாக உள்ள சட்ட மன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை கழகம். அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனவும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

bjp

இதனையடுத்து புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜ் நகர் சட்ட மன்ற தொகுதிக்கு வேட்பாளர்களை இன்னும் அதிமுக, பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அறிவிக்கவில்லை. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாஜக உடன் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளருக்கான நேர்காணலை நடத்தி வருவதாக கூறுகின்றனர். இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளின் அதிமுக வேட்பாளருக்கு பாஜக இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

பாஜகவின் இந்த முடிவால் அதிமுக அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

admk byelection congress Pondicherry Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe