Skip to main content

வடை vs குடும்ப ஆட்சி; பரபரப்பை கிளப்பிய போஸ்டர்; தகிக்கும் கோவை!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
BJP in Coimbatore. DMK is also putting up posters alternately

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் அதனதன் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் விதமாக காட்டமாக வாசகங்களை அச்சிட்டு போஸ்டர்கள் ஒட்டும் கலாச்சாரம் பெருகி வந்தது. இதனால், பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நடந்துள்ளது. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ள போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என போலீசார் எச்சரித்திருந்தனர். மீறி ஒட்டினால், போஸ்டரில் இருக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் அச்சிட்ட அச்சக உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீசார் கடுமையாக எச்சரித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தது. இதனால், அங்கு பெருகி வந்த அரசியல் விமர்சன போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் ஒரு வழியாக குறைந்தது. இப்படியே சில மாதங்கள் அமைதியாக சென்றது. ஆனாலும் அவ்வப்போது சில போஸ்டர்கள் கோவை மாநகரில் ஒட்டப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சிக்கும் விதத்தில் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். இதற்கு யாரும் பதில் போஸ்டர்கள் ஒட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடியையும் பாஜகவையும் விமர்சிக்கும் விதத்தில் கோவை வீதியெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது எனக் கூறும் வகையில் வாசகங்கள் உள்ளன. அதாவது, பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தலின் போதும் அழகாக பேசி, ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால், இந்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றமாட்டார் எனவும் விமர்சிக்கும் கட்சிகள், இவ்வாறு கூறப்படும் பொய்களை மோடி வாயால் வடை சுடுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்துகொண்டு கைகளில் வடைகளை எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தனர். இப்படி தமிழகமெங்கும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள், அவரை நன்றாக வடை சுடுபவர் என்றே பிரச்சாரம் செய்கின்றனர். இந்த பாணியில் தற்போது கோவையிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்தப் போஸ்டரில் பிரதமர் மோடியைச் சுற்றி நிறைய வடைகள் போட்டு, கருப்பு பணம் மீட்பு என்பது ஒரு வடை எனவும், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்பது ஒரு வடை எனவும் இப்படி பல்வேறு வடைகளை பிரதமர் மோடி சுட்டுள்ளார் என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வடைகளின் பட்டியலில் அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய், உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண நிதி வழங்காதது என ஏராளமான நிறைவேறாத திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு அச்சிடப்பட்ட போஸ்டர்கள் கோவையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர்கள் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேல் தனது கால் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு இரண்டிலும் ஒன்றுமில்லை... என வெளியே எடுத்துக்காட்டும் புகைப்படத்தை அச்சிட்டு ஒவ்வொரு வடையாக விளக்கி கூறியிருக்கும் இந்தப் போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

BJP in Coimbatore. DMK is also putting up posters alternately

இது ஒருபுறமிருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவினர் திமுக ஆட்சியை குடும்ப ஆட்சி என விமர்சித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "ஆமாம் குடும்ப ஆட்சி தான். தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆட்சி" என தமிழக அரசின் நான் முதல்வன், உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள மகள், மகன், அம்மா உள்ளிட்டோருக்கு தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கிடையில், கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை படம் பிடித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்தப் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.