243 தொகுதிகள் உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி பின்தங்கி, தற்போது பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் உள்ளதால், சென்னையில் உள்ள பா.ஜ.க மாநிலத்தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜனதாஇணைந்த 'தேசிய ஜனநாயகக் கூட்டணி'யும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த 'மெகாகூட்டணி'யும் போட்டியிட்டன. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பெரும்பான்மை அமைக்க 122 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.