நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் 12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில கவர்னர்களின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் புதிய கவர்னரை நியமிப்பதில் பாஜக அரசு தீவிரமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநில கவர்னர்களின் பதவி காலமும் வெகு விரைவில் முடியும் நிலையில் இருப்பதால் அந்த மாநிலங்களுக்கும் புதிய கவர்னரை தேர்ந்த்தெடுக்க உள்ளனர்.

Advertisment

bjp

இந்த நிலையில் புதியதாக நியமனம் செய்யப்படவிருக்கும் 12 கவர்னர்களில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக அரசு உள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக வேட்பாளர்களில் ஒருவரானா பொன்னருக்கு வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது. பாஜகவின் தலைமையிடம் பொன்னருக்கு நல்ல பெயர் இருப்பதால் அவருக்கு கவர்னர் வாய்ப்பு வழங்க படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.