bjp annamalai warning to edappadi palaniswami

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும்கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக்கொள்வதாகவும் சமீபகாலமாகத்தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகினார்.

Advertisment

இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கியப்பொறுப்பாளர்களும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

இதனிடையே பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, “நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?” என எடப்பாடியை கடுமையாகச் சாடியிருந்த நிலையில், தற்போது பாஜகவினரை அதிமுக திட்டமிட்டு இழுத்து வருவதாக அண்ணாமலைகுற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கட்சியிலிருந்து அவர்கள் சென்றது நல்லதுதான். அப்போதுதான் புதிய ஆட்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க முடியும். ஒரு காலத்தில் திராவிட கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும்என்றும் அந்த கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டு வந்தால்தான் வளர முடியும் என்றும் பேசப்பட்டது. ஆனால் இப்போ பாருங்க பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகளை சேர்த்துதான் அவர்கள் வளர வேண்டும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.இன்னும் யாரை வேண்டுமானாலும் அவர்கள் அதிமுகவிற்குள் இழுக்கட்டும். ஒவ்வொரு வினைக்கும்கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும். அதற்கான நேரமும்காலமும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.” எனக் கடுமையாக பேசியுள்ளார்.