Advertisment

‘புது வரலாறே.. புறநானூறே..’ - வைரலான அண்ணாமலை; வசமாக சிக்கிய ஆதாரம்

bjp annamalai video goes viral social media

Advertisment

‘நாங்கெல்லாம் அண்ணாமலையோட ரசிகர்கள்..’ என பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் ஒட்டப்பட்டிருக்கும் மொபைலுடன் நிற்கும் சிறுவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மண்டையில இருக்கும் கொண்டைய மறந்துட்டியேடா பாடி சோடா.. என நெட்டிசன்கள் அந்த வீடியோவை ரீட்வீட் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை அரசியல் குறித்து தனது பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது, அனைவரிடமும் கேட்கப்படும் அதே கேள்வி அண்ணாமலை முன்பும் வைக்கப்பட்டது. வாரிசா? துணிவா?.. சட்டென சுதாரித்துக்கொண்ட அண்ணாமலை இப்படிச் சொல்லி சமாளித்தார்..

“நடிகர் அஜித்தினுடைய உழைப்பு அசாத்தியமானது. அதேபோல் நடிகர் விஜய் தமது நடிப்பை முதல் படத்திலிருந்து தற்போதைய படம் வரை மிகச் சிறப்பாக மெருகேற்றி உள்ளார். அரசியலில் துணிவாக இருப்பேன்.. வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்.. நேரம் கிடைக்கும்போது வாரிசையும், துணிவையும் பார்ப்பேன்..” என ஈயம் பூசியது போலவும், பூசாதது போலவும் அண்ணாமலை பேசி முடித்தார். அண்ணாமலையின் இந்த பதிவு வைரலாகி வந்தது.

Advertisment

இந்நிலையில், இன்று விவேகானந்தரின் பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு பாஜகவினர் பலரும் பல்வேறு நிகழ்சிகளை நடத்திவந்தனர். அதில், ஒரு பகுதியாக சிறுவர்கள் சிலரை சந்தித்து.. அவர்களுக்கு நோட்டு புத்தகம்,சர்க்கரைபொங்கல் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர். இது அல்ல சமாச்சாரம்.. அந்த சிறுவர்கள் பேசிய அந்த வைரல் வீடியோதான் தமிழ்நாட்டையே கிறுகிறுக்க வைத்துள்ளது.

அந்தச் சிறுவர் கூட்டத்தில்ஒரு சிறுவன்.. அண்ணாமலை படம் போட்டிருக்கும் மொபைல் ஃபோனுடன் யாரிடமோ பேசிக் கொண்டு இருப்பது போல பேசிக்கொண்டிருக்க.. இதை வீடியோ எடுக்கும் பெண் ஒருவர்.. “என்னடா ரசிகர் மன்றம் வச்சிருக்கீங்க?” என அந்த சிறுவர்களை பார்த்து கேட்கிறார். அவர்களோ.. அண்ணாமலை ரசிகர் மன்றம் வச்சிருக்கோம் என மழலை மொழியில் கூறுகின்றனர்.

வீடியோ வெளியானதுதான் தாமதம்.. அண்ணாமலை ஆதரவாளர்கள் பலரும், ‘’புது வரலாறே.. புறநானூறே.. காலம் கனிந்துவிட்டது.. இனி தமிழகம் என்றால் அண்ணாமலைதான்” என ஏகத்துக்கும் வசனமெழுதி இந்த வீடியோவைஷேர் செய்து வந்தனர். ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால்.. நெட்டிசன்கள் இந்த வீடியோவை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளனர்.

ஆம்.. இந்த வீடியோவை நன்றாக ஒருமுறை ரீவைண்ட் செய்து பாருங்கள்... சிறுவர்கள் எல்லாம் கூடி நின்று அண்ணாமலை படம் போட்டுள்ள மொபைல் போனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களா.. பெண் ஒருவர் உள்ளே நுழைந்து “என்னடா ரசிகர் மன்றம் வச்சிருக்கீங்க?” எனக் கேட்கிறாரா... இதுக்கு கொஞ்சம் முன் கவனியுங்கள்..

அந்தப் பெண் கேட்பதற்கு முன்பே.. இந்த சிறுவன் மட்டும் யாரோ சொல்லிக் கொடுத்ததை ஆர்வக்கோளாரில் முன்பே சொல்லிவிடுகிறான். ‘அண்ணாமலையோட ரசிகர்..” என மென்று முழுங்குகிறான். இதை எடுத்து வைத்துக் கொண்டுதான் நெட்டிசன்கள் பாஜகவினரை நெட்டித்தள்ளி வருகின்றனர். அது எப்படி திமிங்கலம்.. கேள்விக்கு முன்பே அந்த பையன் பதில் சொல்றான்.. கொண்டைய மறந்துட்டியே குமாரு.. என விளாசித் தள்ளுகின்றனர். இப்படி சிறுவர்கள் மத்தியில் அரசியலை புகுத்தும் ஆபத்தான விளையாட்டை பாஜகவினர் ஆடத் தொடங்கிவிட்டனர் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe