Advertisment

பாஜகவிற்கு இடைத்தேர்தல் அவசியமில்லை - அண்ணாமலை பரபரப்பு 

bjp annamalai talk about erode east byelection

ஈரோடு கிழக்கு தொகுதிஇடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து,அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த முறைதிமுக கூட்டணிகாங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்தநிலையில், இம்முறையும்காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும்மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நேரடியாகவே அதிமுக களமிறங்கவுள்ள நிலையில், வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்பாஜகவிற்கானது இல்லை என்றும், ஒரு பலம் வாய்ந்த கூட்டணி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்ததேர்தலில் பாஜகவின் பலம் என்ன என்றுநிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதேஎங்களின்நிலைப்பாடு. அதனால்தான் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறும்வகையில் ஒரு வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அதிமுகவில் அந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் வேட்பாளர்கள் தொடர்பாக புதிதாக ஆராய்வதற்கு எதுவுமில்லை. தேர்தலுக்குஇன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் இது குறித்து அறிவிப்போம்" என்றார்.

Advertisment

admk Erode byelection Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe