Advertisment

''அமைச்சர் பொய் சொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கிறார்''- பாஜக அண்ணாமலை சாடல் 

bjp

அனைத்து நாட்களிலும் கோவில்களைத் திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கடந்த 7 ஆம்தேதி தமிழகத்தின் முக்கிய கோவில்களின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பள்ளிகள், திரையரங்குகளைதிறக்கும் அரசு, கோவில்களையும் கட்டுப்பாடுகளுடன் அனைத்து நாட்களும் திறக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.

Advertisment

பாஜகவின் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ''போராடுவதற்கான வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தி அவர்களாகவே அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தான் நோய்த்தொற்று தளர்வுகளை நாம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்தாலும் அனைத்து வகையான பூஜைகளும் எப்போதும் போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நோய்த் தொற்று அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் நிச்சயமாக முதலமைச்சர் கோவில்களைதிறப்பதை தான்முதல் பணியாக மேற்கொள்வார் என்ற உறுதியைஅளிக்கின்றோம்'' எனக்கூறியிருந்தார்.

Advertisment

BJP Annamalai press meet

இந்நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''5 சதவிகிதத்திற்கும் கீழ் எங்கு டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் குறைவாக இருக்கிறதோ அங்கு தளர்வுகளை கொண்டுவரலாம்என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தர்மபுரியில்தான்டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்அதிகமாக இருக்கிறது. 2.48 சதவிகிதம்.அதேபோல் சேலத்தில் தான்டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 0.2 சதவிகிதம்எனக் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிகமாகடெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டேதருமபுரியில் உள்ள 2.48 சதவிகிதம் தான். இது மத்திய அரசு சொல்லியிருக்கிற 5 சதவிகிதத்திற்கு கீழ் உள்ளது. எந்த தேங்காயை உருட்டி எந்த தேங்காயை உடைப்பதற்குஅமைச்சர் ஐடியா செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. மக்களிடம் பொய் பேசுவதை மட்டும் பிழைப்பாக அமைச்சர் வைத்திருக்கிறார்'' என்றார்.

temple minister Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe