BJP Annamalai Press meet in kovai

Advertisment

திமுக கோவை மாவட்டத்தை மாற்றாந்தாய் மனநிலையுடன் பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. நேற்று தமிழக முதல்வர் கோவை மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாகப் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில் இன்று அதே கோவை மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''கடந்த 8 மாத காலமாக திமுக ஆட்சியினுடைய ஒவ்வொரு விஷயத்தையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மழை வெள்ளத்திலிருந்து ஆரம்பித்து பொங்கல் தொகுப்பு வரை எல்லாம் நிறைவேற்றப்படாத திட்டங்கள். அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் உள்ள 517 வாக்குறுதிகளில் 10 கூட நிறைவேற்றப்படவில்லை. இதை அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கோயம்புத்தூர் மக்களிடம்மாற்றாந்தாய் மனப்போக்குடன்தான் திமுக நடக்கிறது. அதையும் கோவை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள்'' என்றார்.