பில்கிஸ்பானு வழக்கில் அரசியல் தலைவர்கள் கொடுத்த மனுக்கள் விசாரிக்கப்படும் என நீதிபதி உறுதியளித்துள்ளார்.
குஜராத்தில் 2004ம் ஆண்டில் நடைபெற்றஹோத்ராரயில் நிலைய ரயில் எரிப்பு கலவரத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து மாத கர்ப்பிணியானபில்கிஸ்பானுகொடூரமாககூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் . அவரது குடும்பத்தாரும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில்குற்றவாளிகளாககைது செய்யப்பட்ட 11 பெரும் சுதந்திர தினவிழாவின் போது விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு பல்வேறுதரப்பிலிருந்தும்எதிர்ப்பு எழுந்தது.
குஜராத் அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துதிரிணாமூல்காங்கிரஸ்எம்.பிமஹுவாமொய்த்ரா,சிபிஎம்கட்சியின் சுபாஷினி அலி பலர் உச்ச நீதிமன்றத்தில்மனுத்தாக்கல்செய்தனர். அவற்றை விரிவாக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் அபர்ணாபட், கபில்சிபில்ஆகியோர் நீதிபதிரமணாவிடம்முறையிட்ட போது உரியஆவணங்களைபார்த்து வழக்கு பட்டியலிடப்படும் எனவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.