Advertisment

“தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது” - கே.எஸ்.அழகிரி

publive-image

Advertisment

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இன்று சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியும் ஊழலும் நடைபெற்றுள்ளது. ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 2600 கோடி ரூபாய்க்கும் மேல் மிகப்பெரிய முறைகேடும் ஊழலும் நடந்துள்ளது. இந்த ஊழலில் அரசியல் பின்னணி உள்ளது. இது நிதி நிறுவனம் செய்துள்ள ஊழல் அல்ல. இதற்குப் பின்னால் மத்தியில்ஆளும் கட்சி உள்ளது. பாஜக இதற்குப் பின்னால் உள்ளது. அதானி விவகாரங்களுக்குப் பின் பாஜக உள்ளது போல் ஆருத்ரா விவகாரத்தின் பின் தமிழ்நாடு பாஜக உள்ளது.

அண்ணாமலையுடன் நிதி நிறுவன அதிபர் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதற்காக சொல்லவில்லை. நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மூன்று பேரை அழைத்து விசாரித்தோம். அவர்கள், ‘பாஜகவின் ஆதரவு இதில் உள்ளது, நிறுவனத்தின் உரிமையாளர் பாஜகவில் பொறுப்பில் உள்ளார். அண்ணாமலையுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. இந்த காரணங்களால் இந்த நிறுவனம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் முதலீடு செய்தோம். ஆனால், இன்று அவர்கள் திட்டமிட்டு பணத்தைகொள்ளையடித்து விட்டார்கள்’எனக் கூறினார்கள்.

Advertisment

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை நேரடியாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை அவர்கள் விசாரிக்க வேண்டும். வழக்கு போட வேண்டும் எனச் சொல்லவில்லை. விசாரித்தால் தான் உண்மை கிடைக்கும். தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு புகலிடமாக பாஜக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe