Advertisment

பிக் பாஸ் லாஸ்லியாவின் காதலுக்கு தந்தை போட்ட அதிரடி கண்டிஷன்... வெளிவந்த ரகசிய தகவல்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின், லாஸ்லியாவின் காதல் விவகாரம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் காதல் பிரேக் ஆப் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் லாஸ்லியாவின் காதல் குறித்து அவரது தோழி ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். லாஸ்லியா, கவின் காதல் பிரேக்கப் ஆகவில்லை என்றும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

losliya

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர். இலங்கையில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிக்பாஸில் பங்கேற்றார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது கவினும், லாஸ்லியாவும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இவர்களுடைய காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன்பிறகும் கவினுடன் நெருங்கி பழகி வந்தார். கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது கதறி அழுத லாஸ்லியா, தன்னையும் வெளியேற்றும்படி பிக்பாஸிடம் கெஞ்சினார். இதனால் அவர் கவினை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று உறுதியானது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை. பிக்பாஸ் கொண்டாட்டம், பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி என சந்திக்க இருவருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

Advertisment

losliya

இதனால் லாஸ்லியா, கவின் முறிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் லாஸ்- கவின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை ஓகே சொல்லிவிட்டதாகவும் ஆனால் அவர் ஒரு நிபந்தனையை விதித்திருப்பதாகவும் லாஸ்லியாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஓராண்டு கவினும், லாஸ்லியாவும் பேசாமல் பழகாமல் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிபந்தனையை அவர்கள் சரியாக கடைபிடித்தால் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாகதான் இருவரும் வெளியில் பங்கு பெரும் நிகழ்ச்சியில் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

big boss kavin losliya love story terms and conditions
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe