Advertisment

தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்... கடந்த தேர்தலில்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

Advertisment

இதனிடையே தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் என கூறப்பட்டுள்ளது.

Advertisment

gkvasan 61

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட தமாகா, தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முடிவு எடுத்து உறுதியாக இருந்ததால்தான், கூட்டணி இறுதியாக காலதாமதமானது குறிப்பிடத்தக்கது.

gk vasan Lok Sabha election Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe