/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalaignar 503.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
திமுக தலைவர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் கலைஞரின் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசிய அவர், 80 ஆண்டு பொது வாழ்க்கையில் 50 ஆண்டு காலம் திமுகவின் தலைவராக இருந்தவர் கலைஞர். அடிதட்டு மக்கள் வாழ்க்கை மேம்பட பெரும் பங்காற்றியவர். சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட தலைவர் கலைஞர். கலைஞரின் இழப்பு வரலாற்றுப் பேரிழப்பு. கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரினார்.
Follow Us