ADVERTISEMENT

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு!

05:00 PM Dec 12, 2023 | prabukumar@nak…

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

ADVERTISEMENT

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் 115 தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் பஜன்லால் சர்மா பதவியேற்க உள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பஜன்லால் சர்மா ஒருமனதாக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் துணை முதலமைச்சர்களாக தியா குமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் ராஜஸ்தான் சட்டமன்றத் தலைவராக வாசுதேவ் தேவ்னானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் ராஜஸ்தான் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT