
தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும்மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக பேசியிருந்தார். இந்நிலையில்கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அண்மையில் பதவி விலகிய நிலையில் பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காவிரியில் மேகதாது அணைக்கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்ஷெகாவத்தைகர்நாடக முதல்வர்பசவராஜ் பொம்மைகடந்த 25 ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடகாவின்மேகதாது திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளஒன்றிய அரசு முயற்சிப்பது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக் கூடாது'' எனத்தெரிவித்துள்ளார்.
Follow Us