'This is the best example of how drinking makes a man cruel' - PMK  Anbumani Ramadas pain!

மதுபோதையில் 2 வயது குழந்தை தந்தையால்அடித்துக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் வேதனையை தருவதாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்பதிவில், 'தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையைச் சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும்.அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது! குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisment