Advertisment

''ஜெயலலிதா இல்லை என்பதால் முதுகெலும்பை நிமிர்த்தி பேசுகிறீர்கள்; காலில் விழுந்த கதை எல்லாம் தெரியும்'' - கனிமொழி பேச்சு

publive-image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள்ஆகியோரைஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

நேற்று தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடு,மாடுகளைகொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியானஆம்பளையாஇருந்தால்; மீசை வச்சஆம்பளையாஇருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால்வாக்காளர்களைசந்திக்க அனுமதிக்க வேண்டும்''எனபேசியிருந்தார்.

Advertisment

publive-image

இந்நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பிரச்சார வாகனத்தில் நின்று பேசிய கனிமொழி, ''வேட்டிகட்டியவனாக இருந்தால், மீசை வைத்த ஆணாக இருந்தால் இதற்கெல்லாம் பதில் சொல் என்று கேட்கிறார் பழனிசாமி. நீங்க எந்த மண்ணில் நின்று கொண்டு இந்தகேள்வியைகேட்கிறீர்கள் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்மை அழிய வேண்டும், அந்த திமிர் அழிய வேண்டும் என்று சொன்ன பெரியாரின் மண்ணில் நின்று கொண்டு இந்தகேள்வியைகேட்கிறீர்கள்.

எங்கஅண்ணனைபார்த்து நீ ஆண்மகனாக, வேட்டி இருக்கா,மீசஇருக்கா என்று எல்லாம்கேக்குற. இதெல்லாம்இருக்கு.எனக்குதெரியும். எங்கள் அண்ணன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக யார் காலில் விழுந்திருக்கிறார்.கவர்னரைசட்டமன்றத்திலிருந்துவெளியேறசெய்யக்கூடிய தைரியம் இருந்த தலைவர் மு.க.ஸ்டாலின். யாருக்காகவும் பயந்ததில்லை. இந்த உலகமேபார்த்துபயந்து கொண்டிருக்கக்கூடியபிஜேபிகட்சியையே எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய முதல் குரல் தமிழகத்தின் குரல், அது மு.க.ஸ்டாலின் குரல். எதற்கும் அஞ்சியதில்லை, பின்வாங்கியதில்லை. தன் கொள்கைகளை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், வேட்டி இருக்கா ஆண்மகனா என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டிருக்ககூடிய பழனிசாமி இடம் கேட்கிறேன், நீங்கள் காலில் விழுந்த கதை எல்லாம் அத்தனை பேரும் பார்த்தோம்.இன்னைக்குதான் ஜெயலலிதா இல்லை என்பதால் தமிழ்நாட்டில் நிற்கும் பொழுது நெஞ்சை நிமிர்த்தி முதுகெலும்பைநிமிர்த்திபேசுகிறீர்கள். இல்லையென்றால் எந்தஅளவிற்குகுனிந்து கொண்டு நின்றார்கள் என்றுஎங்களுக்குதெரியும்'' என்றார்.

Erode kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe