எம்.எல்.ஏ வண்டியில் ஏறிய 80 வயது பாட்டி... அதுக்கப்புறம் நடந்த வேடிக்கையை நீங்களே பாருங்க..!

சட்டமன்ற உறுப்பினர்களில் உயரமாக இருப்பவர் மட்டுமல்ல உத்வேகமாகவும் இருப்பவர் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா. அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொகுதியில் அனைவரும் அறிந்த முகமாக இருந்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வுக்கு வர மறுத்த அதிகாரி ஒருவரை அலுவலகத்துக்கே சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து மற்ற அரசு அதிகாரிகளை அதிர வைத்தார். அதையும் தாண்டி அடிக்கடி மழை, வெயில் என்று இயற்கை காட்சிகளை பதிவிட்டு தான் கிராமத்து மண் சார்ந்தவன்தான் என்பதை அடிக்கடி கோடிட்டு காட்டுவார்.

அந்த வகையில், இன்று தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாகனத்தில் செல்லும் போது மூதாட்டி ஒருவர் அவரது வாகனத்தை கண்டதும் ஃலிப்ட் கேட்டுள்ளார். கிட்டதட்ட 80 வயது இருக்கும் அந்த பாட்டிக்கு சரியாக காது கேட்கவில்லை. அவரிடம் காரில் இருந்தவர்கள் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள், ஆனால் அது சரியானபடி அவரது காதில் விழவில்லை. பிறகு பாட்டியின் வயதை கேட்கும் போதும் அவரால் அந்த கேள்வியை யூகிக்க முடியவில்லை. இந்த சுவாரசியமான வீடியோவை டிஆர்பி ராஜா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாட்டியை சரியான இடத்தில் இறக்கிவிட்டார்களா? என்பதை தன்னுடைய அடுத்த ட்விட்டில் எம்.எல்.ஏ தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

MLA
இதையும் படியுங்கள்
Subscribe