Skip to main content

சசிகலாவின் பினாமி மீது கிரிக்கெட் சூதாட்ட புகார்? ஆக்சன் எடுக்க தயாரான சவுரவ் கங்குலி!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

சென்னையில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தின் தலைநகர்களாக  சென்னையும், பெங்களூருவும் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சௌரவ் கங்குலிக்குப் புகார்கள் போயிருப்பதாக சொல்கின்றனர்.  தமிழ்நாடு பிரிமியர் லீக்கிலும், கர்நாடக பிரிமியர் லீக்கிலும் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக தொடர் புகார்கள் எழுந்ததால், அது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக பிரிமியர் லீக்கில் விளையாடும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் டீமை மையமாக வைத்து ஏறத்தாழ 250 கோடி ரூபாய் அளவுக்கு பெட்டிங் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். இந்த அணியின் உரிமையாளரான செல்வகுமார், சசிகலாவின் பினாமி என்றும் சொல்லப்படுகிறது. 
 

cricket



மேலும் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர்பான சூதாட்டக் குற்றங்களுக்கு காரண கர்த்தாக்கள் என்று இப்போது, ’இந்தியா சிமெண்ட்ஸ்’ சீனிவாசனையும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகி பழனியையும் அகில இந்திய கிரிக்கெட் வாரியம் கார்னர் பண்ணுவதாக கூறுகின்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மகள் ரூபாதான். அவரையும் பழனியையும் நோக்கி விசாரணைப் படைகள் நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு பிரிமியர் லீக்கை தடை செய்யவும் ஒரு முயற்சி நடந்து வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.