அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான வலியுறுத்தல் எழுந்திருக்கும் நிலையில், தற்பொழுது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்ஆகியோரிடம்அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்தனித்தனியாகப்பலமுறை ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகபொதுக்குழுக்கூட்டத்திற்குத்தடைவிதிக்க வேண்டும்எனத்தொடரப்பட்டவழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகபொதுக்குழுக்கூட்டத்திற்குத்தடைவிதிக்க வேண்டும் என ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சி.பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அடிப்படைஉறுப்பினர்களைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை, உட்கட்சி தேர்தலுக்கு முன்பாக அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையைப் புதுப்பிக்கவில்லை, வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தவறான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக் கொண்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும்பொதுக்குழுவுக்குத்தடை விதிக்க வேண்டும் என அவர் தரப்பு வாதத்தை முன் வைத்தார்.
இந்த வழக்கு நீதிபதி தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்ஓபிஎஸ்,இபிஎஸ், உட்கட்சி தேர்தலை நடத்தியபொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை மறுதினம் ஒத்திவைத்துள்ளார்.